நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆம் ஆண்டு சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்.
அங்கு அவர் பேசுகையில்;
1995 ஆம் ஆண்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும்.அதே நவாலி படுகொலைகள் போல சின்னக்கதிர்காமத்திலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம்.
நவாலி படுகொலையில் உடல்சிதறி துடிக்க படுகொலை செய்யப்பட்டமை அங்கு இரத்த ஆறு ஓடியமை ஐ நாவிலும் உலக அளவிலும் பதியப்பட்டுள்ளது. அந்த துன்பத்தை இன்று நான் சபையில் நினைவுகூருகிறேன்.அப்படியான பல இழப்புக்களை குறிப்பாக உயிரிழப்புக்களை தமிழினம் ஒருபோதும் மறக்காது.
அப்படியான இனப்படுகொலைகளுக்கு இன்றுவரை நீதியில்லை.எல்லோரும் அதை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.