தமிழ்தேசிய தந்தை தந்தை செல்வாவின் முப்பத்தி எட்டாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் தந்தை செல்வா அறக்காவற் குழுத்தலைவர் பேராயர் கலாநிதி ஜெபநேசன் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.
முதலாவதாக தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மாலை அணி வித்தலுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வு பின்னர் நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தையின் சமாதிக்கு மலர் அஞ்சலியும் இடம்பெற்றது. நிகழ்வின் வரவேற்புரையினை தந்தை செல்வா நினைவு அரங்காவற் குழுத்தலைவர் எஸ். பேராசிரியர் சத்திய சீலன் ஆற்றினார்.
அஞ்சலி உரைகளை நல்லூர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அருட்தந்தை சி.எஸ். ஜெயக்குமார் அடிகள், முஒலவி எம்.ஐ.மஹ்மூத் [பலாஹி] ஆகியோர் வழங்கியிருந்தனர்.
சிறப்புரையினை கனடாவில் வசித்துவரும் சட்டத்தரணி கனக மனோகரனும், நினைவு பேருரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் செந்தமிழ் சொல்லருவி எஸ்.லலீசனும், நன்றி உரையினை அரங்காவற் குழுவின் உறுப்பினர் வி.ஜி. தங்கவேலும் ஆற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், மாற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பேராசிரியர்கள் தமிழ்த்தேசிய பற்றாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.