மட்டக்களப்பு புதூர் பகுதியில் பதற்றம்:இராணுவத்தினர் சுற்றிவளைப்பு!

0
692

மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புதூர் சிமில தீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

எனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இதன்போது போக்குவரத்து பொலிஸார் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here