ஜப்பானில் ஒலிம்பிக்கை முன்னிட்டு பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை!

0
437

ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஜப்பானில் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாகாண அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மேற்கூறிய அனைத்து அமைப்புகளிலும் இந்த சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அதன் நிர்வாகிகளுக்கு 5 லட்சம் யென்  அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் தடையை மீறி புகைபிடிக்கும் நபர்கள் 3 லட்சம் யென் (ரூ.2 லட்சம்) அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here