ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை சற்றுத் தணிந்துள்ளது.
கடந்த ஒருவாரமாக நிலவிய கடுமையான வெப்பம் இப்போது குறைந்துள்ளது. பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவாக 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவானது.
பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் நிலைமை மேம்பட்டாலும் ஜெர்மனியைக் கடும் வெப்பம் தொடர்ந்து வாட்டுகிறது.
சில இடங்களில் வெப்பத்தின் தீவிரம் தீயை உண்டாக்கியது. ஆறு நாட்களாகத் தொடர்ந்த காட்டுத் தீச்சம்பவங்கள் காற்றுத் தூய்மைக்கேட்டில் கொண்டுபோய்விட்டன. இதனால் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெப்பக்காற்று ஐரோப்பாவில் கோடைவெப்பம் முன்கூட்டியே வரக் காரணம் என நிலவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.