இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் உள்ள நெடுஞ்சாலையில் மோரான்டி என்னும் பாலத்தின் ஒருபகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதனால் அந்த பாலத்தின் மேல் இருபுறமும் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் 148 அடி உயரத்திலிருந்து மளமளவென கீழே விழுந்தன. இந்த விபத்தில் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாலி பாலம்
இந்நிலையில் அந்த விபத்து நடந்து சுமார் ஓராண்டு ஆகும் நிலையில் மோரான்டி பாலம் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தை வெடி வைத்து தகர்ப்பதற்கு முன்னதாக அப்பகுதிக்கு அருகில் சுற்றி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தரைமட்டத்தில் இருந்து இரண்டு தூண்கள் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 4500 டன் எடைகொண்ட இரும்பு கம்பிகள் மற்றும் சிமெண்ட் கலைவையால் கட்டப்பட்டதாகும்.
இந்தப் பாலம் தகர்க்கப்பட்ட காட்சிகளை பல்வேறு ஊடகங்கள் நேரடிக் காட்சியாக ஒளிபரப்பின.