காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தகவல்கள் கிடைக்கவேண்டி வவுனியாவில் யாகம்!

0
402

யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்தில் சிறந்த தீர்வு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் யாகம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயக பிரதேசங்களில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா தேடிவந்த பிள்ளையார் ஆலயத்தில் இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற யாகத்தினை சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சாம்பஸ்ரீ ஐயப்பதாசக்குருக்கள் நடத்தி வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வில் வவுனியா அந்தணர் ஒன்றியம் குருக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here