நேபாளத்தில் நேற்று நடந்த பூகம்ப சோகம் தீரும் முன்பு இன்று மீண்டும் காத்மாண்டுவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியாவில் இருந்தது. இதனால் அசாம், ராஜஸ்தான், டில்லி, உத்திரபிரதேசம் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
நேபாளத்தில் கோடாரி பகுதியில் இன்று 12. 43 மணிக்கு 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் 6.9, மற்றும் 6. 2 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. கவுகாத்தி, அலகாபாத், கோல்கட்டா, பாட்னா, புவனேஸ்வர், ஜபல்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் காரணமாக நேற்றைய பாதிப்பு தொடர்பான மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக்கியதுடன் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்டர்ஷாக்குகள் ஏற்பட்டு வருகின்றன.
மிதமான அளவில் அவை இருந்து வந்த நிலையில் இன்று சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது. இந் நில அதிர்வானது நேபாளத்தில் ரிக்டரில் 6.7 அலகுகளாக பதிவானது. இந்நடுக்கமானது நேபாளத்திலிருந்து 17 கிலோமீட்டரில் கோதாரி என்ற இடத்தில் மையம் கொண்டதாக இருந்தது.
மேலும், வடமாநிலங்களான டெல்லி, கவுகாத்தி, பாட்னா, அலகாபாத், கொல்கத்தா, புவனேஷ்வர், பீகார், உத்தர பிரதேசத்திலும் கட்டிடங்கள் அதிர்ந்த காரணத்தினால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். டெல்லி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. பூட்டான் தலைநகர் திம்புவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்கும் பதட்டம் நிலவுகிறது.
நேபாளத்தில் நேற்று 25 க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.