முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சிவநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட 14 பேர் இன்று (27) அதிகாலை புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார், அப்பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட காணி உரிமையாளர் மற்றும் பெண்ணொருவர் அடங்கலாக 14 பேரை கைதுசெய்துள்ளனர்
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, தம்புள்ளை, மாத்தளை, சாவகச்சேரி, கலேவெல போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, இச்சந்தேகநபர்களிடமிருந்து சொகுசு காரொன்று, மூன்று ஸ்கானர் கமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.