பிரான்சில் இந்தவாரத்தில் அசாதாரணமாக அக்னி வெப்பம் (கனிக்குல்) தாக்கவுள்ளது. வழமையாக யூலை மற்றும் ஓகஸ்ற் மாதத்தில் தான் கோடைகாலத்தில் வெப்பநிலை உயருவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு யூன் மாத இறுதியிலேயே வெப்பநிலை 48 பாகையை தாண்டலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரான்சில் பரிஸ் நகர் உள்ளடங்கும் இல் து பிரான்ஸ் உட்பட்ட 53 பிராந்தியங்களுக்கு வெப்பநிலை குறித்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று மாலையில் இருந்தே உயரும் வெப்பநிலை ஆகக்குறைந்தது 6 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால் 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப்போன்ற பேரவல அக்னிவெப்பநிலை உருவாகலாம் என எச்சரிக்கபட்டுள்ளது. 2003 இல் ஐரோப்பாவில் பரவியவெப்ப அலைகாரணமாக பிரான்சில் மட்டும் சுமார் 16>000 பேர் பலியாகியிருந்தனர். தலைநகர் பரிஸையும் வெப்பம் தாக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளதால் சில பொதுப் பூங்காக்களில் அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு உடல் வெம்மையை தணித்து குளிர்மைப்படுத்தும் வகையில் சிறப்பு நீர்விசிறிகள் அமைக்கப்படுமென பரிஸ் மாநகரசபை வட்டாரம் அறிவித்துள்ளது அக்னி பேரவல நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகள் யாவும் நாடளாவிய எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அக்னிவெப்பத்தால் ஐரோப்பாவில் சுமார் எழுபதாயிரம் பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.