பிரான்சில் கடும்வெப்பம்: பரிஸ் உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

0
644

இல்-து-பிரான்சை இந்த வாரம் கடும் வெப்பம் வாட்டி எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை 15:00 மணி அளவில் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் 30°c வரையான வெப்பம் நிலவியதாக Météo France அறிவித்துள்ளது.

Jardin du Luxembourg, Nemours, Paris-Montsouris மற்றும் Fontainebleau ஆகிய பிராந்தியங்களில் 29°c, 30°c வரையான வெப்பம் நிலவியிருந்தது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை 35°c இல் ஆரம்பிக்கும் வெப்பம், வரும் வியாழக்கிழமை 40°c இனை தொடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 

பரிஸ், 

Hauts-de-seine,

Seine-saint-denis,

Val-de-marne,

Seine-et-Marne 

ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

72 வருடங்களின் பின்னர் ஜூன் மாதத்தில் சந்திக்க இருக்கும் 40°c வெப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here