துருக்கி அரசுக்கு சொந்தமான ஏர்பஸ் விமானம் 97 பயணிகளுடன் மிலன் நகரில் இருந்து இஸ்தான்புல் நோக்கி வந்து கொண்டிருந்தது. நடு வழியில் அந்த விமானத்தின் ஒரு என்ஜினில் தீடீரென தீ பிடித்தது.
இதனையடுத்து, கொழுந்து விட்டெரிந்த தீயுடன் அருகாமையில் உள்ள அடாடர்க் விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியதாக துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோதே என்ஜினில் தீ பிடித்ததா? அல்லது தரையிறங்கும்போது தீ பிடித்ததா? என்பது தொடர்பாக சில ஊடகங்கள் வெவ்வேறு விதமான கருத்துகளை வெளியிட்டுள்ளன.
இந்த திடீர் தரையிறக்கத்தை அடுத்து அடாடர்க் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அங்கு இறங்க வேண்டிய இதர விமானங்கள் சபிஹா கோக்கென் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.