நில நடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மிக தீவிரமாக தாக்கியுள்ளது. அதன் தாக்கம், இந்திய வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்தியா-நேபாள் நடுவே உள்ள இமயமலை சிகரமான எவரெஸ்டில் பனிப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. நிலநடுக்கத்தால் எவரெஸ்ட்டில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 8 பேர் சாவு! நதிகளில் வெள்ள அபாயம் இமயம் ஆடியதால் பனி சரிவு ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
அதேபோல, பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேற்ற வீரர்கள் அமைத்திருந்த கேம்ப்புகள் பனிவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இதில் நேபாள நாட்டு ஷெர்பா மலையேற்று கைடுகள் மட்டுமின்றி, வெளிநாட்டு மலையேற்ற வீரர்களும் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் ஆபத்துள்ளது. இமயமலை அடிவாரத்திலுள்ள மக்கள், நதியோரங்களிலுள்ள மக்கள் அங்கிருந்து கிளம்பி செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் பனி உருகி, நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.