சிங்காரச்சென்னையில் தண்ணீர் இல்லையாம். 4000 உணவகங்களை மூடுவதற்கு அதன் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனராம். இந்த நிலை விரைவில் எமது தாயகத்துக்கும் வரலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி நீருக்கு எமனாக இருக்கும் ஆழ்துளைக்கிணறுகளை நாம் எமது பகுதிகளில் உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லையேல் நாம் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிப்பதோடு எமது சந்ததிக்கு பாலைவனங்களை பரிசளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
தற்போது கிளிநொச்சி நகரை அண்டிய கிராமங்களில் 120 அடி ஆழத்துக்கும் அதிக ஆழத்தில் ஆழ் துளைக்கிணறுகள் தோண்டப்படுகின்றன.எந்த கட்டுப்பாடுகளுமின்றி எந்த அனுமதியுமில்லாமல் தான்தோன்றித்தனமாக இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. பிரதேசசபையோ அல்லது வேறு எந்த அமைப்போ இதை தடை செய்யவோ அல்லது மட்டுப்படுத்தவோ இல்லை. எனவே காலக்கிரமத்தில் நாமும் இரணைமடுவுக்கு மகாவலி வரவேண்டும் என கூச்சல் போடப்போகிறோம். அதற்கு முதல் ஆழ்துளைக்கிணறுகளை தடைசெய்யும் வழிமுறையை கண்டறிய வேண்டும்.