நாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நாவலப்பிட்டி, கடுங்கஞ்சேன நகரிலுள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திலேயே நேற்று (14) இந்த சம்பவம் இடம்பெற்றது.
குறித்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நேற்று இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை 06 பெண்கள் சேர்ந்து அறுத்துள்ளனர். சங்கிலி பறிபோவதை அறிந்து குறித்த பெண் கூச்சலிட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சங்கிலியை அறுத்த 06 பெண்களை கைதுசெய்துள்ளதோடு, பறிபோன சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த, வத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 வயது 28 வரையான பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த 06பெண்களும் ஆலயங்களில் இடம்பெறுகின்ற விசேட பூஜைகளில் குழுவாக சென்று பக்தர்களின் தங்கநகைகளை களவாடும் சம்பவத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.