அரேபியக் கடலில் உருவாகியுள்ள‘வாயு’ புயல், இந்தியாவின் குஜராத் மாநில கரையை நெருங்குவதால், 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
‘வாயு’ புயல் குஜராத் மாநில கரையோரத்தில் நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால்,அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் பெய்து வருவதோடு மாத்திரமின்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும்தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், தென்கிழக்கு அரேபியக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டுள்ளது.குஜராத்தின் போர்பந்தர் மற்றும் விராவல் இடையே நாளை இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை நிலையம்அறிவித்துள்ளது.
இதனால் குஜராத் கடல் பகுதியில் 100 கிலோமீற்றர்வேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு,சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் அடை மழை பெய்து வருகின்றது.
புயல் கரையைக் கடக்கும்போது 110 கிலோமீற்றர்முதல் 120 கிலோமீற்றர்வரை காற்றின் வேகம் இருக்கும்.
ஆகையால், மீனவர்களைகடலுக்கு செல்ல வேண்டாம் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது.