இன்று புதன்கிழமை அதிகாலை திருகோணமலை கந்தளாய் வீதியில் மண்கொள்ளையரால் வேகமாக மண்கொண்டு செல்லப்படும் வாகனங்களால் வீதியில் சென்ற மாடுகள் அடித்து காயமுற்று பலமணி நேரம் உயிருக்கு போராடி நீர்த்தாகத்துடன் கிடந்தவாறு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அந்நேரம் வீதியால் சென்ற இளைஞர்கள் அவஸ்தையுடன் போராடும் மாட்டை குளிப்பாட்டி அதன் நீர்த்தாகத்தையும் தீர்த்து மிருகவைத்தியரை அழைத்து உரிய சிகிச்சையளித்து மாட்டு உரிமையாளரிடம் பொறுப்பு கொடுத்து சென்றார்கள்.
தற்காலத்தில் மாடுகளை இறைச்சிக்காக களவு செய்யும் காலத்தில் வீதியில் போராடும் மாடுகளை தெய்வீகத்தோடு மதிக்கும் உணர்வு உயரிய பண்பாகும்,