காலையில் அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லி அழைத்துசென்றார்கள் ஆனால் இன்றுடன் 29 ஆண்டுகள் ஆரம்பிக்கின்றன என ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் 29 வருடங்கள் ஆரம்பிப்பது குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க ஆனால் இன்னைக்கு 29 வது ஆண்டு தொடங்குது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் அந்த இரவு விடியலை அரசியல் கொலையில் சீரழிக்கப்பட்ட நிரபராதியின் வாழ்க்கைக்கு உதாரணமாக எனது மகன் வாழ்க்கை மாறிவிட்டது எனவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
வெளியே நானும் உள்ளே அவனும் மருகி செத்துப்போகலாம் ஆனால் காரணமானவங்களை காலம் அடையாளம் காட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான குற்றவாளியை கண்டறியாம மறைந்தவர் பெயரால் அருவருப்பான அரசியல் செய்யுறாங்க எனவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பை தருகின்றது என தெரிவித்துள்ள அற்புதம்மாள் 28 வருடத்தில சட்டத்தின் ஆட்சி என்றால் என்னவென்பதை பார்த்துட்டேன்,சட்டம் நீதி என்பது பணம் உள்ளவங்களிற்கான வசதியாக நீடிக்கவேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்