பதவியை விட்டு விலகுவதற்கு முன், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளை காட்டுமாறு கோரிக்கை விடுத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டுத்தரவில்லை என தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமற்போன உறவினர்கள் வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில் தமது பிள்ளைகளை வேண்டி பிரார்தனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து பேரணியாக கந்தசுவாமி கோவில் வீதியூடாக 843வது நாளாக காணாமற்போன உறவினர்களால் சுழற்சி முறை உண்ணாவிரதத்தில் இடம்பெறும் கொட்டகையை வந்தடைந்தனர்.
இதன்போது அமெரிக்க ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன்,
‘ஜனாதிபதியே நாங்கள் உங்களை வரவேற்கவில்லை நீங்கள் உங்கள் இடத்திற்கு திரும்பி செல்லுங்கள்’,
‘சிறிசேனவே நீங்கள் ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதற்கு முன் எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை காட்டுங்கள்’
போன்ற பததைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று நாம் ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். தமிழர்களின் வாக்குகள் பெற்று அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் தமிழர்களையும் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் சாதகமாக்கிக் அரசியல் லாபம் கொள்வதைப் பார்க்க வருத்தமாக உள்ளது.
தமிழருக்கு நல்லிணக்கம் என்பது ஒரு போலி கருத்து. சிங்கள பௌத்த சின்னத்தை தமிழர் நிலத்தில் நிறுவவும் , தமிழர்களின் நிலத்தை கைப்பற்றவும் சிங்கள அரசாங்கம் நல்லிணக்கம் என்று கூறுகிறது.
நல்லிணக்கம் என்ற பெயரில், தமிழர்களுக்கு எதுவும் நடக்கவில்லை.
ஸ்ரீலங்கா இராணுவத்தால் எந்த நிலமும் விடுவிக்கபடவில்லை
இலங்கை இராணுவத்தால் தொடர்ந்தும் தமிழரின் பெரும்பாலான பொருளாதாரங்கள்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கற்பழிப்பு மற்றும் காணாமற் போகும் சம்பவங்கள் இன்னும் நடக்கிறது.
வட-கிழக்கு இணைப்பு நடக்கவில்லை.
தமிழருக்கு சமஷ்டி இல்லை.
நல்லிணக்கம் என்ற பெயரில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணக்காரர்களாக ஆனார்கள். அவர்கள் தேர்தலில் தங்கள் வாக்குறுதியை மறந்துவிட்டார்கள்.
நல்லிணக்கம் என்ற பெயரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணைகள், கிழக்கை முஸ்லிம்ககளுக்கு கைவிட்டு, சமஷ்டி அமைப்பை கைவிட்டு, முன்னணி மதமாக புத்தத்தை தழுவி, ஏக்க்கி ராஜஜியை ஏற்றுக் கொண்டனர் .
இந்த நல்லிணக்கம் கருத்து தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான ஒரு சதி ஆகும்.