நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து சுமார் 50 மையில் தூரத்தில் 7.6 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்புக்கள் அண்டை நாடான இந்தியாவிலும் உணரப்பட்டதாக தெரிய வந்துள்ளது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட் டுள்ளன.
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் கார ணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொது மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். மெட்ரோ ரயில்கள் சேவை உடனடியாக நிறுத்தப் பட்டன உணரப்பட்டது என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். மெட்ரோ ரயில்கள் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டன என தமிழக ஊடகம் கூறியுள்ளது. பாட்னா, லக்னோ, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சில இடங்களில் செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழகத்தின் சென்னையில் கோயம்பேடு, நந்தனம் போன்ற சில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் இதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நேபாளத்தில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 பேர் வரை இறந்திருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது 449 பேர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இன்று காலையில் 11.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.9 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக டில்லி, உ.பி. பீகார், உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரும் நில அதிர்வு ஏற்பட்டது. இதில் பீகாரில் மட்டும் 10 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 5 பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி மதியம் உயர் மட்ட குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாளத்தில் நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சாலைகள் பிளவு பட்டு நிற்கின்றன. நூற்றாண்டு கால பழமையான புராதன தராகரா டவர் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. விமான சேவை நிறுத்தப்பட்டது. இடிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். பலர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
https://youtu.be/1jpaYxd8ffY