மைத்திரிக்கு எதிராக முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்!

0
482

முல்லைத்தீவிற்கு மைத்திரிபால சிறிசேன இன்று சென்றுள்ள நிலையில் காணாமலாக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை அங்கு முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரியும் தமது போராட்டத்தை கண்டுகொள்ளாத சிறிலங்கா ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நகர் பகுதியில் அவர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் பிரதி அமைச்சர் மஸ்தான்,தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் இராணுவ பாதுகாப்புடன் வருகை தந்து நிகழ்வில் இணைந்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக இன்றைய தினமும் 824 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here