ஓமன் நாட்டில் இருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து நேற்று மாலை விபத்தில் சிக்கியது. இதில் 31 பேர் பயணம் செய்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது 17 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 8 பேர் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக லேசான காயத்துடன் தப்பிய 4 இந்தியர்கள் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். உயிரிழந்த 8 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராஜகோபாலன், ஃபரோஸ் கான், ரேஷ்மா ஃபரோஸ் கான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாகுர் ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்றவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதால் அவர்கள் யார் என கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிந்த 8 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பேருந்து நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.