2004 சுனாமி நிதியத்திலிருந்து 82 பில்லியன் இலங்கை ரூபாயை மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சமூக சேவைகள் பிரதியமைச்சர் இரஞ்சன் ராமநாயக்க இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார். குறிப்பிட்ட பணத்தை முன்னாள் ஜனாதிபதி தனது பெயரில் உள்ள கலாச்சார மற்றும் தர்ம ஸ்தாபனங்களின் பெயரில் வைப்புச் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சுனாமியின் போது கொல்லப்பட்ட பெண்மணியின் கழுத்திலிருந்த ஆபரதணத்தை கொள்ளையடித்த நபருக்கும்,சுனாமி நிதியத்தை தவறாக பயன்படுத்திய நபருக்கும் இடையில் வித்தியாசமில்லை, நகையை களவாடியவர் தண்டனையை அனுபவித்துள்ளார்., பணத்தை திருடியவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்