தலைமன்னார் பிரதான வீதியில் உந்துருளி விபத்தில் இளைஞன் பலி!

0
303

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஏ.அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞன் உயிரிழந்தார்.

இன்று குறித்த இளைஞனின் பிறந்த நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞனும், மற்றுமொருவரும் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் போது உந்துருளியை செலுத்திய அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி (வயது-32) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்தவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே உயிரிழந்த இளைஞன் மது போதையில் காணப்பட்டதாக தெரிய வருகின்றது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here