கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பில் பரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.
தற்கொலை தாக்குதல் எச்சரிக்கை காரணமாக இந்திய உயர்ஸ்தானிகர், ஹோட்டல் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டமையும் இன்றைய தெரிவுக்குழு அமர்வில் தெரியவந்தது.