இனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளை தடை செய்வதாக YouTube நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் இனவெறி மிகுந்த காணொளிகள் அதிகம் வலம் வருகின்றன. அவ்வாறான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
YouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும், ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் காணொளிகளை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்.
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.