ரிசாட் பதியுதீன் அமைச்சர் பதவி விலகியதற்கு பொங்கல் செய்த இளைஞர்கள்!

0
241

அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் அமைச்சர் பதவியைத் துறந்தமையை கொண்டாடும் முகமாக வவுனியா செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர் மத்திய அரசியல் பங்கேற்றுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன், மேல் மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண ஆளுனர் ஆகியோர் பதவி விலக வேண்டுமென தெரிவித்து நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்தது. இந் நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகினர். இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலகியதை, அவரால் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமான சாளம்பைக்குளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான செக்கடிப்புலவு கிராமத்து இளைஞர்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு கட்டமாக பம்பைமடு சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வீதியால் சென்றவர்களுக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த இளைஞர்கள், கடந்த காலங்களில் அமைச்சரினால் நாம் ஓரங்கட்டப்பட்டிருந்தோம். எமது கிராமங்கள் பூர்வீக கிராமங்களாக இருந்தபோதிலும் எமது கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் புதிதாக அமைக்கப்பட்ட சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here