புதூர் நாகதம்பிரான் ஆலய வளாகத்தில் தூக்குக் காவடிகளுக்கும் தடை!

0
591

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்தில் தூக்குக் காவடி உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல சிறிலங்கா படையினர் தடை விதித்துள்ளதுடன் அடியார்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

அரச அதிகாரிகளின் வாகனங்கள் ஆலய வளாகத்திற்கு செல்ல அனுமதி உண்டாம் ஆனால் பக்தர்களின் பறவைக்காவடி ஆலய வாசலுக்கு செல்ல பாதுகாப்பு இல்லையாம் மக்களின் நலனுக்காக பாதுகாப்பா? அல்லது நாடு பதட்ட நிலையில் இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவா? இத்தனை பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் எல்லாம் என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here