
அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சற்றுநேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளனர்.
இந்த இராஜினாமா தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (3ஆம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தௌிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தாலும் முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் செயற்பாட்டிற்கு தாம் ஆதரவளிப்பதில்லை எனவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது