
யாழ்ப்பாணம், பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக பலாலி இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (01) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பலாலியில் படைத்தளம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த காணிகள் இராணுவத்தினரால் சிரமதானம் செய்யப்படுவது வழமை. அதேபோன்று இன்றும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. அதன் போது கல் ஒன்றை இராணுவத்தினர் அகற்ற முற்றபட்ட போது, அந்தப் பகுதியில் கண்ணிவெடி ஒன்று வெடித்தது.