கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பேருந்தொன்றும் உந்துருளி ஒன்றும் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மையில், 247ம் கட்டை பகுதியில் இந்த சம்பவம், இன்று மாலை 6 மணியளவில் நடந்தது.
இலக்கத்தகடு பொருத்தப்படாத புத்தம் புதிய பல்சர் உந்துருளியே விபத்திற்குள்ளானது.
இதன்போது கிளிநொச்சி உச்சிப்புளத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி கஜானந்த் என்பவரும், குமார் தனுசன் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.