
தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவர்கள் அழைப்பை ஏற்படுத்திய 1800-க்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள 23 மடிக்கணினிகள், மூன்று கணினிகள், 138 கையடக்கத் தொலைபேசிகள், 30 ஹார்ட் டிஸ்க்குகள், 12 பென் ட்ரைவ்கள் ஆகியன தொடர்பில் ஆய்வுகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனைத் தவிர, இறுவட்டுகள், DVD, 67 DVR உபகரணங்கள், 142 சிம் அட்டைகள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.