யாழில் வயிற்றோட்டத்திற்கு மாணவன் பலி!

0
150

யாழ். போதனா வைத்தியசாலையில் வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்பட்ட  மாணவர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2ல் கல்வி கற்கும் கோப்பாயைச் சேர்ந்த ச.அபிகரன் (வயது7) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்ததுடன் அவரது சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலையுடன் தொடர்பு கொண்ட போது, குறித்த மாணவன் பாடசாலை ஆரம்பித்த நாளில் இருந்து பல நாட்களாகப் பாடசாலைக்கு வரவில்லை எனவும் கடந்த 24ம் திகதியே மாணவன் வயிற்றோட்டத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது பெற்றோர் தமக்குத் தெரிவித்தாக தெரிவித்தனர்.

குறித்த மாணவன் மரணம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினரிடம் வினவியபோது, குறித்த மாணவன் உட்கொண்ட கச்சான் பையில் காலாவதித் திகதி பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் அன்றைய தினம் உட்கொண்ட முட்டையில் தமக்குச் சந்தேகம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

கோழி எச்சத்தில் காணப்படும் சன்ம நெல்லா என்ற ஒருவகைப் பற்றீரியா முட்டையில் தொற்றியிருக்க கூடும் எனத் தாம் கருது வதாகவும், இந்த பற்றீரியா உடலில் சென்றி ருந்தால் பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தவல்லது எனினும் உயிரிழந்த மாணவனின் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை உறுதிப்படத் தெரிவிக்க முடியாதென சுகாதாரப் பகுதியினர் தெரிவித்தனர்.                   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here