என்னை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுங்கள்: பசில்!

0
183
pasilபொருளாதார அபிவிருத்தியமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு பசில் ராஜபக்ச உட்பட மூவரும் வெலிக்கடை வைத்தியசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தன்னை  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு சிறைச்சாலையினரை அவர் கோரியுள்ளார்.
எனினும், சிறைச்சாலை வைத்தியர், பசிலை சோதனை செய்த பின்னரே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here