பிரான்சு பாரிசின் புறநகர் பகுதிகளில்ஒன்றான ஆல்போர்வில் நகரசபை முன்றலில். பிராங்கோ தமிழ்ச் சங்கம் ஆல்போர்வில், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றோடு இணைந்து கவனயீர்ப்பை ஏற்பாடுசெய்திருந்தது. நேற்று 25.05.2019 சனிக்கிழமை காலை10மணிமுதல். மதியம்13 மணிவரை குறித்த கவனயீர்ப்பு தமிழினவழிப்பு கண்காட்சியாக நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டவர்கள் முன்வந்து எமது போராட்டத்தின் நிலைப்பாட்டைக் கேட்டு; தெரிந்துகொண்டனர். அவரஇ;களுக்கான பிரெஞ்சு மொழித்துண்டுப்பிரசுரமும் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவிநகரபிதா அவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். எதிர்வரும் திங்கட்கிழமை (27.05.2019) நகரசபை முதல்வர் இதுதொடர்பாக சந்திப்புஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து கொட்டும் மழைக்கு மத்தியில் 13.30 மணி முதல் 18 மணிவரை இவ்றி மாநகரசபை முன்றிலில் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. பிராங்கோதமிழ்ச்சங்கம்இவ்றிசூர்சென், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. வல்துமார்ன் பாராளுமன்ற உறுப்பினர். Mme.Mathilde Panot (Député Du Val-Du-Marne) அவர்கள் கலந்துகொண்டு. தமிழ்மக்களுக்கான தனது ஆதரவையும். தமிழ்மக்களுக்காகத் தொடர்ந்து தனது அரசியல் பங்களிப்பையும் செய்வதாக உறுதியளித்தார். இவ்றிசூர்சென் தமிழ்ச்சங்கத்தால் குறித்த பாராளுமன்ற உறுப்பினரிடம் எமதுகோரிக்கை அடங்கியமனுவும் கையளிக்கப்பட்டது. இங்கும் பல டவெளிநாட்டவர்கள் ஆவலோடு குறித்த கவனயீர்ப்பு கண்காட்சியை பார்த்திருந்தனர். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வழங்கியிருந்தார். தொடர்ந்து எதிர்வரும் 29.05.2019 புதன்கிழமை திரான்சி மாநகரசபை முன்றிலில் குறித்த கவனயீர்ப்பு நடைபெறவுள்ளது. (ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்!