நிரபராதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலை மாணவர்களினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று வியாழக்கிழமை இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.