ஈரான் நாடு போரிட விரும்பினால் அதுவே அந்த நாட்டின் முடிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் போரிட விரும்பினால் அதுவே அந்நாட்டின் அதிகாரப்பூர்வமாக முடிவாக இருக்கும் என்றும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்கா பயப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து தீவிவாதிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, தற்போது அந்நாட்டினை அச்சுறுத்த விமானம் தாங்கிக் கப்பல், குண்டு வீசும் விமானங்களையும் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே அமெரிக்கா தன்னை எதிர்க்கும் நாடுகளை மிரட்டுவது வழக்கம். வடகொரியா, சீனாவை அடுத்து தற்போது ஈரானுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த அதிரடி அரசியலை அமெரிக்காவிலேயே பல எதிர்கட்சிகள் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.