நாளை வற்றாப்பளை செல்லவிருக்கும் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

0
449

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் நாளை (20.05.2019) இடம்பெறவுள்ள நிலையில் சுமார் ஆயிரம் வரையான பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள அதேவேளை ஆலயத்துக்கு உள்நுழையக்கூடிய அனைத்து பாதைகளிலும் ஆலயத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டருக்குள் சுமார் 3 இடங்களுக்கு குறையாது வீதி தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு ஆலய வளாகத்தை சூழவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஆலய உள்பகுதி மற்றும் வெளி பகுதி வீதிகளெங்கும் பொலிசாரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் மக்கள் அச்சமடைந்த சூழலில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல இலட்சம் மக்கள் வருகைதரும் இந்த ஆலய வளாகத்தில் பலத்த பாதுகாப்பை அவதானிக்க முடிகிறது.

பக்தர்கள் அனைவரும் சோதனையின் பின்னரே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் ஏற்கனவே தெரிவித்ததை போன்று உணவகங்கள், குளிர்பான கடைகள் மற்றும் கச்சான் கடைகள் மட்டுமே அனுமதிக் கப்பட்டிருக்கிறன. ஏனைய கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆலய வளாகத்தில் குடிநீர் சுகாதார, முதலுதவி வசதிகள் அனைத்தும் செய்யப்படட நிலையில் எந்த அச்சமுமின்றி பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை செய்யக்கூடிய நிலைமை காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

அத்தோடு இன்று யாத்திரை வரும் பக்தர்கள் பலர் ஆலய வளாகத்தை வந்தடைந்துள்ளனர். மக்கள் இன்றும் வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

நாளைய ஆலய உற்சவத்தில் கலந்துகொள்ளவரும் பக்தர்கள் ஏற்கனவே அறிவிக்கப்படடதற்கு அமைவாக அடையாள அட்டை கொண்டுவருவது அவசியம் . தூக்கு காவடிகள் வெளியில் இருந்து கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆலய உள்வளாகத்தில் மட்டும் தூக்கு காவடி நேர்த்தியை மேற்கொள்ளலாம் என்ற விடயங்களும் ஏற்கனவே நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தரப்பால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here