விடுதலைக்காக போராடிய ஓர் இனத்தின் வேரறுத்த வலியோடு கூடிய இறுதி நாள்.
ஆணிவேர் அறுபட்டாலும் அடியோடு சாய்ந்திட நாம் ஒன்றும் சாதாரண அத்திமர இனம் அல்ல.
ஆயிரம் விழுதுகள் அடி ஊன்றி அகலவிரிந்து , சுட்டொரிக்கும் சூரியனையே கட்டுப்படுத்தி அண்டிவந்தவர் ஆறியமர்ந்திட நிழல் பரப்பும் ஆலமரம் போன்று பார் எங்கும் பரந்து வாழும் தமிழ் இனம்.
நச்சு பாம்புகளின் நாசகார சதியால் ஆயுதம் மட்டுமே மௌனித்தது. ஆறிவாயுதம் இன்னும் கூர் தீட்டப்பட்டுக்கொண்டே உள்ளது .
ஜனநாயக ரீதியாக எம் மக்களின் விடியலை நோக்கி , சில கோடரிக்காம்புகளை களைந்து மீண்டுமோர் பேரம் பேசும் சக்தியாக ஒற்றுமையுடன் அணிதிரள்வோம்.