உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது உயிருக்கு நிகரான தாய்த்தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
மே 18 தமிழனாக பிறந்த எவரும் மறக்க முடியாத நாள். உறுதியான, இறுதியான ஒரு தீர்வு, தனித் தமிழீழம் வரும் வரைக்கும் மறக்கக்கூடாத ஒரு நாள். ஒருவர் இருவரல்ல, நூறு பேர் ஐநூறு பேர் அல்ல, ஆயிரம் பேர் ஐயாயிரம் பேரல்ல, ஒன்றரை இலட்சம் தமிழீழ உறவுகள் கதறி சிதறி நம்முடைய முள்ளிவாய்க்கால் மண்ணில் கடலில் கரைந்த நாள். நந்திக்கடல் செங்கடலாக மாறிய அந்த நாளை எப்படி மறக்க முடியும்?. நம்முடைய அப்பா அம்மா மட்டுமில்ல அத்தை மாமா மட்டுமில்ல தாத்தா பாட்டி உடன் பிறந்த சகோதர சகோதரி மட்டுமில்ல எங்கள் வீட்டு பிஞ்சு குழந்தைகளின் கைவிரல்கள் சிதறிய நாள். அந்த சின்னஞ்சிறிய கண்கள் சிதறி சிதறி எங்கள் மண்ணோடு மண்ணாக கலந்த நாள். அந்த அழகழகான இதழ்கள் துடிதுடித்து அடங்கிய அந்த நாளை தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏந்தி ஒரு நிரந்தர தீர்வு வருகிற வரை அயர்ந்துபோகாமல், சோர்ந்து போகாமல், உறுதியோடு நம்பிக்கையோடு போராடி உலகம் தனித்தமிழீழத்தை அங்கீகரித்து அறிவிக்கின்ற வரைக்கும் போராடிகொண்டே இருக்கின்ற ஒரு நாளாகத்தான் மே 18னை பார்க்கின்றேன். என்னை போன்ற தமிழனுக்கு சொல்லமுடியாத குமுறலையும் பெரும் கோபத்தையும் கொடுக்கிற ஒரு நாளாகத்தான் இந்த நாளை இதயத்தில் பதிகின்றேன். அப்படிதான் இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக இளையத்தலைமுறையினர் மனதில் உறுதி ஏற்க வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகள் கடந்து விட்டது. நானும் பலமுறை ஐநாவில் பேசி இருக்கிறேன். parisut of justice ( இடைவிடாத நீதியின் தேடல்) channel 4க்கு பிறகு நான் செய்த ஆவணப்படம் அங்கு திரையிடப்பட்டிருக்கிறது. பல மனித உரிமையாளர்களை அப்படைப்பு கதறி அழ செய்திருக்கின்றது. 20க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை படைப்பாக்கம் செய்திருக்கிறேன். ஆனாலும் நான் இன்னும் சோர்ந்து போகவில்லை. ஐநா நமக்கான நீதியினை தள்ளிபோடலாம். காலம் தாழ்த்தலாம். ஆனால் ஐம்பது ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட நம் இனம் தமிழீழத்தை அடையாமல் ஒருபோதும் ஓயாது. அதற்கான முற்றும் முழுதான பொறுப்பை எங்களுடைய இளையத்தலைமுறை உறுதிசெய்யும். காலமும் இயற்கையும் அதற்கான சூழலை உருவாக்கும். அதுவரை அந்த நெருப்பை அனையாமல் பாதுகாப்பது நம்முடைய கடமை மட்டுமல்ல நம்முடைய உறுதியான செயல் திட்டமாகவும் இருக்க வேண்டும்.

நிமிர்வோம்
வெல்வோம்.
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்
வ.கௌதமன்
தலைவர் ,
தமிழ்ப் பேரரசு கட்சி.