டென்மார்க் தலைநகரில் நான்காவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

0
611


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் 16.05.19அன்று
டென்மார்க் தலைநகர Gammeltorv முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட
மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது .

2009 தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியை வேற்றின மக்கள் மிகவும் கவனத்துடன்
பார்வையிட்டார்கள். Helsingborg மற்றும் Helsingør நகர செயற்பாட்டாளர்கள் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
உலகம் கண்ட இன அழிப்பை விஞ்சும் வகையில் முள்ளிவாய்க்காலில் தமிழர் மீது மாபெரும்
இனப்படுகொலையை இலங்கை அரச பயங்கரவாதம் செய்தது. அந்தக் காட்சிகளையே
கண்காட்சிகளாக வைத்து சர்வதேசத்திடம் நீதி வேண்டி நிற்கிறோம். முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல. இன்னொரு போராட்டத்தின் ஆரம்பம், இந்த பத்தாண்டு மீள் எழுச்சியில் துணிந்து, எழுந்து தமிழீழம் மலரும் வரை எங்கள் போராட்டத்தை தொடர்வோம்.

2009 ஆண்டின் வலி சுமந்த நாள் மே18 அன்று மாபெரும் எழுச்சிப்பேரணி நடை பெற உள்ளது.
அனைத்து தமிழீழ மக்களையும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாளையதினம் 17.05.19 அன்று டென்மார்க் தலைநகர Rådhuspladsen இன் முன்றலில் தமிழின
அழிப்பு கண்காட்சி நடைபெறும்.

தமிழ் டெனிஸ் அமைப்புகளின் ஒன்றியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here