யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச மக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நேற்று புதன்கிழமை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் குறித்த போராட்டம் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீதிகள் சிறப்பாக செப்பனிடப்பட்டு காணப்படுகின்றன.
ஆனால், யுத்தத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட நிலையில் 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட எமது வடமராட்சிக் கிழக்கு பிரதேசத்தினர் இப்போதும் குன்றும் குழியுமான பாதைகளிலேயே பயணங்களைத் தொடர்கின்றனர் என சுட்டிக்காட்டினர்.
மேலும், பிற பிரதேசங்களோடு ஒப்பிடும் போது எமது பிரதேசம் அபிவிருத்திகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றோம்.
இது தொடர்பில் உரியவர்களிடம் நேரடியாகவும், கடிதங்கள் மூலமும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தோம். ஆனால் 5 வருடங்கள் கடந்தும், அவை எவையும் நிறைவேற்றப்படவில்லை.