இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதல்களின் எதிரொலி… இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்ற காரணங்களை கூறி சிங்களவர்கள் கின்னியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலை தகர்த்துள்ளனர்.
மேலும் குருநாகல்- பூவெல்ல பிரதேச தக்கியாவும் சிங்களவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் புனித நூல்களும் எரியூட்டப்பட்டன.
மேலும் வன்முறை தொடராதிருக்க இலங்கை அரசாங்கம் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் எந்த பள்ளிவாசல் எப்போது தாக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செயற்பட்ட இன்றும் செயற்பட்டுக்கொண்டுவரும் இலங்கை முஸ்லிம்கள் இன்று அதே பெரும்பான்மை சிங்களவர்களால் அடக்குமுறைக்கு ஆளாவது பலரையும் கடந்த காலங்களுக்கு இட்டுச்செல்வதாகத் தெரிகின்றது.