ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வாழும் சிறுவர்கள் யுத்த வடுக்களில் இருந்து மீள முடியாதவர்களாகவும் அதன் அடையாளங்களை மீளவும் தமது மனதில் பதித்தவாறே வாழும் நிலையும் தொடர்கின்றது.
யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் கூட அப்பகுதியில் சிறுவர்களுக்கன எந்தவிதமான அபிவிருத்தியை காண முடியவில்லை.
கொடிய யுத்தம் விட்டுச் சென்ற வடுக்களையும்இ அதன் அடையாளங்களையுமே அங்கு காணமுடிகிறது.
இதனால் அங்கு வாழும் சிறுவர்கள் அந்த போரின் வடுக்களுடனும் அதன் அடையாளங்களுடனுமே நாளாந்தம் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் மனரீதியாகவும்இ உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும் இந்த சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள் இன்று வரை இல்லாத நிலையே தொடர்கின்றது.
அவர்களை சுற்றி போரின் கோரத்தாண்டவத்தையும்இ கொடூரத்தையும் வெளிப்படுத்தும் அடையாளங்களும்இ வீட்டில் வறுமை நிலையுமே காணப்படுகின்றது.
இதனால் அவர்கள் மனரீதியாக மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக விளங்குகின்றது.