சிலாபம் பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக வெளியான செய்தி அடுத்து ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர், தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைய தெரியப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளனர்.
இதனால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன் காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சிலாபம் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4.00 மணிவரை தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பொலிஸார் விடுத்த அறிவித்தலின்படி குறித்த ஊரடங்குச் சட்டமான நாளை காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளிவந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பினை பொலிஸார் தற்போது விடுத்துள்ளனர்.