யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிமன்ற நீதவான் அந்தோனிசாமி பீட்டர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபரின் சமர்ப்பணம் அல்லது விண்ணப்பம் கிடைக்கப்பெறாமையாலும், சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் பிணை வழங்குவதற்கான நியாயாதிக்கம் இல்லை எனவும் தெரிவித்து குறித்த பிணை மனுவை நிராகரித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விசேட சோதனை நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மூவரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.