குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை பழுது நீக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் 06/05/2019 அன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தில், குவைத் ஏர்வேஸ் விமானத்தின் கீழ் பகுதியில் சக்கரத்தின் அருகே இந்தியா கேரளாவைச் சேர்ந்த நபர் மெக்கானிக் வேலை செய்து கொண்டிருக்கும் போது,
விமானத்தை பின்னோக்கி தள்ளும் வாகனத்தை மற்றொருவர் இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக, விமான சக்கரத்தில் நசுங்கி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த மெக்கானிக் ஆனந்த் ரவிச்சந்திரன் பலியாகியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.