கடும்பாதுகாப்போடு பாடசாலைகள் ஆரம்பம்: ஆசிரியர் சங்கம் கண்டனம்!

0
745

வடமாகாண பாடசாலைகள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸாாின் அதியுச்ச பாதுகாப்புடன் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மாணவா்களின் வருகை வெகுவாக குறைந்தே காணப்படுகின்றது.

உயிா்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து இரண்டாம் தவணைப் பாடசாலைகள் ஆரம்பிப்பதது பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாடசாலைகளில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றையதினம் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பைகள் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இரானுவம், பொலிஸார் இணைந்து

சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு சோதனைகளுக்கு மத்தியிலும்

பாதுகாப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற முதல் நாளில் மாணவர்களின் வருகை என்பது பாடசாலைகளில் வீழ்ச்சியாகவே காணப்படுகின்றது.

நாடாளாவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும்

பாடசாலைகளில் கடும் பாதுகாப்புக்கள் போடப்பட்டிருக்கின்ற குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பினும் கூட, அந்தப் பொறுப்பை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது சுமத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டுவருவது கவலையளிக்கின்றது என்று இணைந்த ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்திருக்கிறது.

இவ்விடயம் தொடர்பில் அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்ற போதிலும், அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமை அண்மையில் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவத்திலிருந்து தெளிவாகியிருக்கின்றது. 

அரசாங்கம் மாத்திரமன்றி நிர்வாக மட்டத்தில் உள்ள அனைவரும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதிலிருந்து விலகியிருக்கிறார்கள். இத்தகைய தாக்குதலொன்று இடம்பெறப்போவதாக முன்னரே அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை மற்றும் இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை நாடு எதிர்கொள்ளும் வகையில் தீவிரவாதமும், அடிப்படைவாதமும் வேரூன்றும் விதத்தில் கடந்தகாலங்களில் செயற்பட்டிருத்தல் என்பனவும், சர்வதேச அடிப்படைவாதிகள் இங்கு சுதந்திரமாகச் செயற்படத்தக்க வகையில் அரசாங்கம் பின்பற்றுகின்ற சர்வதேச கொள்கைகளுமே இந்த தாக்குதலுக்கு சாதகமான பின்னணியை உருவாக்கியிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here