உயிர்ப்பலியான உறவுகளுக்கு பிரான்சு ஆர்ஜந்தையில் இடம்பெற்ற வணக்க நிகழ்வு!

0
722

கடந்த 21.04.2019 ஞாயிறு ஈஸ்ரர் பண்டிகையின் போது தமிழர் தாயகமாம் கிழக்கு மாகாணத்திலும் சிறீலங்காவின் தலைநகராம் கொழும்பிலும் பயங்கரவாதிகள் நடாத்திய தற்கொலைத்தாக்குதலில் உயிர்ப்பலியான அனைத்து உயிர்களுக்குமான வணக்க நிகழ்வு 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தை பாடசாலை மண்டபத்தில் நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந் நினைவு வணக்க நிகழ்வில் ஆர்ஜந்தை மாநகர உதவி முதல்வர் Nicolas Bougeard அவர்களும் அவருடன் இணைந்து மாநகரசபையைச் சேர்ந்தவர்களும் பங்கு கொண்டனர். உயிர் நீத்தவர்களின் நினைவாக மண்டபத்தில் செய்யப்பட்ட நினைவு இடத்துக்கு முன்பாக சிறியவர்கள் பெரியவர்கள் சுடர் ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்தினர்.

நினைவு நிகழ்வில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களும், துணை முதல்வர் Nicolas Bougeard , மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் சார்பாக திரு. அகிலன், தமிழ் இளையவர்கள் சார்பாக செல்வன் திவாகர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக அதன் பரப்புரைப் பொறுப்பாளார் போன்றோர் நினைவு உரைகளையும், கண்டன உரைகளையும் ஆற்றியிருந்தனர். தமிழின அழிப்பின் அதியுச்ச நாளான முள்ளிவாய்க்கால் 10 ஆவது ஆண்டும் அதன் கனதிபற்றியும், தாயகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்மீது அபாண்டமான பழியைச்சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளமையையும், அரசும் அதன் கூலிகளும், தமிழர்களை அழிப்பதையே குறியாக நிற்பதையும் வெளியுலகிற்கு பயங்கரவாதம் என்று கூறிக்கொண்டு பயங்கரவாத செயற்பாட்டுக்கு துணைபோனவர்களை சுதந்திரமாக திரியவிட்டுக்கொண்டு, சனநாயகவழியில், அரசியல் ரீதியில் போராடுகின்ற தமிழர்களையும், மாணவர்களை கைது செய்துள்ளமையானது கடந்து போன அரசுகள் போன்றே தற்போதைய அரசும் மக்களின் கருத்து, பேச்சுச்சுதந்திரத்தைக் கூட பயங்கரவாதம் அதற்கு துணைபோகும் செயற்பாடாகவுமே பார்க்கின்றது என்றும், கடந்த 71 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தமிழின அழிப்பையும் இவ்வாறான பல ஆயிரம் படுகொலைகளை சிங்கள பௌத்த பேரினவாதம் செய்து வருகின்றது என்றும் அதில் ஒன்றுதான் இது என்பதும் ஆனால் இந்த தாக்குதலில் பல வெளிநாட்டுப்பிரசைகளும் உயிரை விட்டது பெரும் வேதனையானதொரு விடயம் என்பதையும் அதற்கான நன்றியாக தமிழர்கள்தான் அவர்களை நினைவில் வைத்து வணக்கம் செய்துவருகின்றார்கள் என்றும் குறிப்பிட்டனர். சமநேரத்தில் இதே பகுதியில் உள்ள Eglise Saint – Jean Marie Vianney தேவாலையத்திலும் உயிர் நீத்தவர்களின் நினைவாகவும் திருப்பலிப்பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here