நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து நிலைமையயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குறித்த பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
உடன் அமுலுக்கு கொண்டுவரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரான்சில்
நீர்கொழும்பு, பலகத்துறை, தைக்கா வீதியில் இருவருக்கிடையே இடம்பெற்ற தனிப்பட்ட தகராரே இவ்வாறு இரு சமூக பிரச்சினையாக உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டுமுள்ளன.
குறித்த பிரதேசத்தில் தற்போது விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.